‘வெட்கமின்றி வாழ்கிறீர்கள்… லைவ் இன் ரிலேஷன்ஷிப் இளைஞரை வெளுத்த நீதிபதி!

Published On:

| By Kumaresan M

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களும் தங்களை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்களும் தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.What privacy is invaded?

இந்த நிலையில், தங்களது பெயர்களை அரசிடத்தில் பதிவு செய்வது தங்களது பிரைவசியை பாதிப்பதாக உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ஜெய் திரிபாதி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி நரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெய் திரிபாதி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர,’ எனது கிளையண்ட் தனது உறவை பதிவு செய்து வெளியே சொல்ல விரும்பவில்லை. தனது தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க விரும்புகிறார்’ என்று வாதிட்டார்.

அதே வேளையில், உத்தரகாண்ட் அரசு வழக்கறிஞர், ‘லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களை பதிவு மட்டுமே செய்ய அரசு சொல்கிறது. எந்த உறுதி மொழியும் அவர்களிடத்தில் இருந்து அரசு கேட்கவில்லை. மனுதாரர் அர்த்தமற்ற வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளார்’ என்று நீதிபதிக்கு பதில் அளித்தார். What privacy is invaded?

இதையடுத்து, நீதிபதி நரேந்தர் கூறியதாவது, ‘இந்த மாநிலத்தில் நீங்கள் இணைந்து வாழ எந்த தடையும் இல்லை. உங்கள் கிளையன்ட் ரகசியமாக குகையிலா வசிக்கிறார். மக்கள் மத்தியில்தானே இணைந்து சமுதாயத்துடன் ஒருங்கிணைத்துதானே வாழ்கிறார். திருமணம் செய்யாமல் கொஞ்சமும் வெட்கப்படாமல் வெளிப்படையாக சேர்ந்து வாழ்கிறார்கள். இதில், உங்களிடத்தில் என்ன ரகசியம் இருக்கிறது?

இதில், உங்களது தனிப்பட்ட உரிமை எந்த விதத்தில் பறிக்கப்படுகிறது? நீங்கள் இணைந்து வாழ்வது உங்கள் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியும். சமுதாயத்துக்கு தெரியும். அப்படியிருக்கையில் உங்களின் ரகசியம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? ‘ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் , விசாரணையை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

?> What privacy is invaded?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share