இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் தங்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 3,500கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.5சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு 2,155கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் தொடர்புடைய 2,567பேர் கைது செய்யப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் 2,383கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 2,445பேர் பிடிபட்டனர்.
2022இல் 3,502கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3,982 பேர் கைது செய்யப்பட்டனர்.
2020-க்கும் 2022-க்கும் இடையே தங்கக் கடத்தல் 62.5சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக 4,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 414வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 115பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிடிபடும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவுதான் என்றும் கடத்தல் தங்கத்தின் உண்மையான அளவு அதிக அளவில் இருக்கும் என்றும், இது குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 160டன் தங்கம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இப்படி தங்கம் அதிக அளவில் கடத்தப்படுவதற்காக காரணம் என்ன என்பது குறித்து இந்தத் துறையை சேர்ந்தவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
“2021-2022 நிதியாண்டில் இந்தியா சுமார் 800டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இப்படி இறக்குமதி அதிகரிக்கும்போது தங்கக் கடத்தலும் அதிகமாகத்தான் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் நலிவடைந்து பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதனால் பணம் ஈட்ட சுலபமான வழி தங்கக் கடத்தல் என்று இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
வெளிநாட்டு சந்தை மற்றும் இந்திய சந்தையின் தங்க விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிக வித்தியாசம் இருப்பதாலும், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற தங்கம் சிறந்த வழி என்பதாலும், தங்கம் இறக்குமதி வரி மற்றும் வரி அதிகமாக இருப்பதாலும் அதிக அளவு தங்கக் கடத்தல் இந்தியாவில் .
தங்கக் கடத்தலுக்கு முக்கிய காரணமே இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் தங்கத்துக்கு உள்ள அதிக ஈர்ப்பு என்றுகூட சொல்லலாம்.
தங்கக் கடத்தல் என்பது சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம் என்பதால் அரசுக்கு வர வேண்டிய வரி மற்றும் வருமானம் வெகுவாகக் குறைகிறது. மேலும், இது இந்திய ரூபாயின் மதிப்பைக்கூட பாதிக்கிறது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் தங்கம் அதிகம் கடத்தப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் கேரளா மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு!
வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!