ஈரான் நாட்டு சுப்ரீம் லீடர் அயேதுல்லா அலி கமேனி கோமா நிலைக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கமேனி அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அவர் கோமா நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்களும் பரவி வருகிறது.
முன்னதாக கமேனி தனது இரண்டாவது மகன் மொய்தபா கமேனியை ஈரான் நாட்டு சுப்ரீம் லீடராக நியமித்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாகவே கமேனியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் பொது இடங்களில் அவர் தென்படுவதை தவிர்த்து வந்தார்.
லெபனானில் ஹிஸ்புல்லா தவைர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு, தெகரான் நகரில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் தனது கையில் துப்பாக்கியையும் வைத்திருந்தார்.
தற்போது,85 வயதாகும் அயேதுல்லா கமேனிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு குடல் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஈரான் நாட்டில் 1979 ஆம் ஆண்டு மன்னராட்சியை அகற்றி விட்டு, ஈரான் புரட்சி படையினர் ஆட்சியை பிடித்தனர். மன்னர் முகமது ரிஷா ஷா விரட்டியடிக்கப்பட்டார். முதலில் ரேகுல்லா கமேனி ஈரான் நாட்டு சுப்ரீம் லீடராக பதவியேற்றார். 1989 ஆம் ஆண்டு ரேகுல்லா கமேனி மறைவுக்கு பிறகு, அயேதுல்லா கமேனி சுப்ரீம் லீடரானார். கிட்டத்தட்ட 6 பிரதமர்கள் கமேனிக்கு கீழ் பணியாற்றியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த புகைப்படங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு கமேனி மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கேட்டதும் ஓடி வந்து நடித்து கொடுத்தார்… நயன் பற்றி தனுஷ் சொன்னது என்ன?
“மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 50% உயர்த்த வேண்டும்” – நிதிக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்