2025 – 2026-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், செல்போன், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீதான வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஸ்மார்ட் மீட்டர், சூரிய மின்கலன்கள் உள்ளிட்டவற்றின் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. what gets cheaper costlier
விலை குறையும் பொருட்கள்!
மொபைல் போன்கள், உயிர்காக்கும் மருந்துகள், EV பேட்டரிகள், LED/LCD டிவிகளின் டிஸ்ப்ளே, மருத்துவ உபகரணங்கள், கப்பல் செய்வதற்கான மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மேலும் 10 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படும், துத்தநாகம், லித்தியம் – அயன் பேட்டரி ஸ்க்ராப் போன்றவற்றிற்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படும்,
40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் விலை கொண்ட அல்லது 3,000 சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், 1600cc க்கு மிகாமல் எஞ்சின் திறன் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள், உணவு மற்றும் பானத் தொழில்களில் பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டும் நிறமிகள் உள்ளிட்டவற்றின் விலை குறையும். what gets cheaper costlier
விலை உயரும் பொருட்கள்!
ஸ்மார்ட் மீட்டர், சூரிய மின்கலன்கள், இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள், மெழுகுவர்த்திகள், டேப்பர்கள், படகுகள் மற்றும் பிற பாத்திரங்கள், பிவிசி ஃப்ளெக்ஸ் பிலிம்கள், பிவிசி ஃப்ளெக்ஸ் ஷீட்கள், பிவிசி ஃப்ளெக்ஸ் பேனர் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட பின்னப்பட்ட துணிகள் விலை உயர்கிறது. what gets cheaper costlier