What are the highlights of PSLV C-58

விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியா

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் நேற்று (டிசம்பர் 31) தொடங்கிய நிலையில்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதில், பொருத்தப்பட்டுள்ள `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இவை தவிர காலநிலை பற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது.  இந்த ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்துஇ ன்று காலை 9.10 மணிக்கு கவுன்ட்டவுனை முடித்துக் கொண்டு விண்ணில் பாய்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

புத்தாண்டு நன்மை தரட்டும்! நல்லாட்சி தொடரட்டும்! முற்போக்கு சிந்தனை மலரட்டும்!

பியூட்டி டிப்ஸ்: திருமணத்துக்குப் பின் எடை அதிகரிக்காமல் இருக்க…

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *