மஹிந்திரா நிறுவனம் புதிய மஹிந்திரா 400 எலக்ட்ரிக் எக்ஸ் யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரை ஏராளமானோர் புக்கிங் செய்து வரும் நிலையில் எலக்ட்ரிக் காரில் ஒரு மேஜர் பிரச்சினை இருப்பது தெரியவந்ததால் காரை வடிவமைத்த பொறியாளர் நேற்று (செப்டம்பர் 27) இரவு சென்னை வந்துள்ளார்.
சென்னை அருகில் மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ளது மஹிந்திரா ரிசர்ச் வேலி (MRV -Mahindra Research Valley) மையம்.
இங்கு கார்களை வடிவமைத்து அதனை செய்யாறு அருகே உள்ள ஆக்கூரில் உள்ள டிராக்குகளில் சோதனை ஓட்டம் செய்வார்கள்.
அங்கே ஸ்பீடு டிராக், ஆப் ரோடு டிராக், வாட்டர் டிராக் ( இஞ்சின் மூழ்கும் அளவில் தண்ணீர் உள்ள டிராக்கில் ஓட்டி பரிசோதனை செய்வது),
ஏபிஎஸ் டிராக் (வழவழப்பான டைல்ஸ் ஒட்டிய பாதையில் இரு புறமும் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருக்கும் போது காரை வேகமாக ஓட்டி பிரேக் அடித்து பரிசோதனை செய்வது),
மவுண்ட் டிராக் (மலைபோல் அமைக்கப்பட்ட டிராக்கில் சாய்வாக ஓட்டி பார்த்தல்) ஆகியவை உள்ளன.
மவுண்ட் டிராக்கில் 180 டிகிரி, 150 டிகிரி, 120டிகிரி, 80 டிகிரி டிராக்குகளில் ஓட்டி பார்த்து அப்ரூவல் கொடுத்த பிறகுதான் புனே மற்றும் நாசிக் ஆலைகளில் கார் உற்பத்தி துவங்கப்படும்.
அப்படித்தான் மஹிந்திரா 400 எலக்ட்ரிக் எக்ஸ் யூவி கார் செப்டம்பர் 8 இல் அறிமுகமாகி விறுவிறுப்பாக புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் புரொடக்ஷன் மந்தமாக இருப்பதாக சொல்கிறார்கள் மஹிந்திரா ஊழியர்கள் தரப்பில்,
அதைப் பற்றி மஹிந்திரா எம்ஆர்வி மையத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில்,
“மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை பொறியியல் அதிகாரி வேலுசாமி மஹிந்திரா சிட்டியில்தான் இருந்து வருகிறார்.
தொழில்நுட்பங்களுடன் மஹிந்திரா 400 எலக்ட்ரிக் எக்ஸ் காரை வடிவமைத்த பொறியாளர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சொனல்கர்.
இவர்தான் நேற்று (செப்டம்பர் 27) இரவு அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்தார்.
செங்கல்பட்டு அருகில் உள்ள மஹிந்திரா எம்ஆர்விக்கு வந்த அவர் இன்று சக பொறியாளர்களுடன் (MRV -Mahindra Research Valley) ஆலோசனை செய்து வருகிறார்.
400 கிலோ மீட்டர் கார் ஓடுவதற்கு 6 மணி நேரம் சார்ஜ் ஏற்றப்படுவதை ஸ்பீடாக ஏற்றி நேரத்தை குறைக்கவும் முக்கியமாக ஸ்டார்ட்டிங் பிரச்சினை இருந்து வருவதை சரிபார்க்கவும் பங்கஜ் சொனல்கர் வந்திருக்கிறார்” என்கின்றனர்.
வணங்காமுடி
”தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” : பிஎஃப்ஐ தமிழக தலைவர்!
அமலுக்கு வந்தது போலி பத்திரப் பதிவு ரத்து திட்டம்!