West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

மேற்கு வங்கம் ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த மத்திய அரசு – காங்கிரஸ் கண்டனம்!

இந்தியா

மேற்கு வங்கம் மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் ரங்கபாணி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 17) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்து பயணிகள் ரயில் மீது மோதியதில் அந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 60 பேர் காயமைடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் இரங்கல்

இந்த ரயில் விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜூன் 17) தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரயில் விபத்தில் சிக்கி சிலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

“மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

அதிகாரிகளிடம் பேசி தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல்

ரயில் விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன்.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன” என்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. இந்த துயர நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.

West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு ரயில்வேத்துறையில் தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி ‘கேமராவால் இயக்கப்படும்’ சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும்!

இன்றைய சோகம் இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டல்.

மேலும் இந்த ரயில் விபத்திற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” என ரயில் விபத்து தொடர்பாக தனது இரங்கல் மற்றும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்

“மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில்வே விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகும்.

இன்றைய விபத்து இந்த உண்மைக்கு மற்றொரு உதாரணம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இந்த அப்பட்டமான அலட்சியம் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி

West Bengal train accident: Central government announced relief - Congress condemned!

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாஞ்சோலை… மறக்க முடியாத வரலாறு : திக்கற்று நிற்கும் தொழிலாளர்களை திரும்பி பார்க்குமா அரசு ?

காதை பிளந்த அலறல் சத்தம்… தண்டவாளத்தில் சடலம்: ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் திக் திக்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *