ரயில் விபத்து: ஸ்பாட்டுக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர்!
மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 60 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாலை 4 மணிக்கு சென்றடைந்தார். இருசக்கர வாகனத்தில் விபத்து நடந்த பகுதி முழுவதும் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து வருகிறார்.
தொடர்ந்து விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். பின்னர் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ரயில் விபத்துக்களை தடுப்பதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கவாச் சிஸ்டம் விபத்து நடந்த பகுதியான டார்ஜிலிங்கில் உள்ள தண்டவாளங்களில் இன்னும் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேற்கு வங்கம் ரயில் விபத்து: நிவாரணம் அறிவித்த மத்திய அரசு – காங்கிரஸ் கண்டனம்!