மேற்குவங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.
மேற்கு வங்க மாநிலம் ஒண்டா ரயில் நிலையம் அருகே இன்று (ஜூன் 25) அதிகாலை 4 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக லூப் லைனில் சென்றுள்ளது.
அப்போது லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டது. மேலும் சரக்கு ரயில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
இதன்காரணமாக காரக்பூர் – பங்குரா – ஆத்ரா ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பகுதியை சீரமைக்கும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!