share market : வார இறுதி நாள்… உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!

Published On:

| By Kavi

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த பின்னர், உயர்ந்து வரும் வேலைவாய்ப்பின்மை சதவீதம் மற்றும் பணவீக்க சதவீதம் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அந்நாட்டுடன் கூட்டு வர்த்தகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் அதன் தாக்கத்தை சந்தித்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உலக வர்த்தகத்தில் முன்னிலையாக விளங்கும் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் வெள்ளி விலை கடந்த 2 ஆண்டுகளின் இல்லாத சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளின் உச்சமாக அமெரிக்க பங்குச் சந்தை நாஷ்டாக் கடும் சரிவை சந்தித்து வருகிறது. எலான் மாஸ்க்கின் டெஸ்லா பங்கு கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது.

நேற்று வியாழக்கிழமை நாஷ்டாக் கமாடிட்டி வர்த்தகத்தில் 1.2% சரிந்து ஒரு அவுன்ஸ் $2,369.29 டாலராக விலை குறைந்து உள்ளது. வெள்ளி கடந்த 11 வார வீழ்ச்சியை சந்தித்து அவுன்ஸ் 4.8% குறைந்து $27.6 ஆக உள்ளது. இதன் தாக்கமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து 83.50 ரூபாயைத் தாண்டி சென்றுள்ளது.

உலகளாவிய சந்தைகளில் மந்தமான போக்குக்கு மத்தியில் கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தையில் வங்கி மற்றும் நிதி பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சந்தை பரிவர்த்தனை வரி மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி உயர்வு அறிவிப்பிற்கு பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறுவதால் இந்திய சந்தைகளின் போக்கு எதிர்மறையாக பாதித்தது வருகிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 5வது நாளாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் தொடர் சரிவுடன் முடிந்தது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் நெஸ்லே, டைட்டன், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கடும் நட்டத்தையும் ஏற்படுத்தியது. டாடா மோட்டார்ஸ் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்துது.

லார்சன் அன்ட் டூப்ரோ, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தைக் கொடுத்தன.

முறையே Tata Motors (5.97%), ONGC (4.83%), BPCL (3.67%), SBI Life (3.62%), L&T (2.91%) லாபத்தையும் Axis Bank (-5.08%), Nestle India (-2.50%), ICICI Bank (-2.14%), Titan (-2.11%), Tata Steel (-1.75%) நட்டத்தையும் கொடுத்தன.

ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸின் சந்தை மூலதன மதிப்பு (எம்கேப்) வியாழன் அன்று முதல் முறையாக 4-டிரில்லியனைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.

ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கனரா வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு (YoY) 10.5 சதவீதம் அதிகரித்து, கட்டணங்கள் மற்றும் வசூல் போன்ற வட்டி அல்லாத வருமானம் மூலம் 3,905 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் 3535 கோடியை ஈட்டியது.

PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 432.81 கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 347.32 ஈட்டியதாக தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 1.46%உயரந்து 787.25 ரூபாயில் முடிவடைந்தது.

அசோக் லேலண்ட் நிறுவனம் முதல் காலாண்டில் 8599 கோடியை வருவாயாக ஈட்டியதாக பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் வருவாய் 8189 கோடியாக இருந்தது.

டெக் மஹிந்திரா நிறுவனம் முதல் காலாண்டில் நிகர லாபம் 23 சதவிகிதம் உயர்ந்து 851 கோடியை ஈட்டியதாக பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 692 கோடியை ஈட்டியது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முதல் காலாண்டில் நிகர லாபம் 95 சதவீதம் அதிகரித்து 629 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் திங்களன்று அதன் வரிக்கு பிந்தைய லாபம் (PAT) இந்த ஜூன் காலாண்டில் 200 சதவீதம் உயர்ந்து 302 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ள நிலையில், சுஸ்லான் எனர்ஜி பங்கு அதன் தொடர்ந்து உயர்ந்து வியாழக்கிழமை வர்த்தகத்தில் 62.01 ரூபாயில் முடிவடைந்தது.

ஜூலை 26 வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் வர்த்தகத்தில் அமெரிக்க சந்தை குறியீடுகள் சரிவுடன் உள்ளதால் அதன் தாக்கம் ஆசிய பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தை பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்தும் காலை முதல் அமர்வு தொடங்கியது.

Aarti Drugs, Accelya Solutions India, Ador Fontech, Amber Enterprises India, Apcotex Industries, Aro Granite Industries, Ashiana Housing, Bandhan Bank, Cipla, Chembond Chemicals, City Union Bank, ESAF Small Finance Bank, Electrosteel Castings, FGP, Gateway Distriparks, Gujarat Mineral Development Corporation, Gujarat Themis Biosyn, HT Media உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

ராயன் முதல் சட்னி சாம்பார் வரை… இன்றைய ஓடிடி & தியேட்டர் ரிலீஸ்!

ஹெல்த் டிப்ஸ்: இளைஞர்களைத் தாக்கும் ஹார்ட் அட்டாக்: தவிர்ப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share