விருந்தில் மட்டன் நல்லி எலும்பு கறி இல்லாததால், திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக்கூடிய திருமணங்கள் தற்போது அல்ப காரணங்களுக்காக நின்று போய் விடுகின்றன.
அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் மட்டன் நல்லி எலும்பு கறி போடாமல், தங்களை அவமதித்து விட்டார்கள் எனக்கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிஜாம்பாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், ஜக்தியால் பகுதியை சேர்ந்த பையன் ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து பெண் வீட்டார் தங்கள் உறவினர்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டினருக்காக நான்-வெஜ் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது அந்த மெனுவில் மட்டன் நல்லி எலும்பு கறி இல்லை, இது தங்களை அவமதிக்கும் செயல் என்று மாப்பிள்ளை வீட்டினர் சண்டை போட்டுள்ளனர்.
பதிலுக்கு பெண் வீட்டினர் நீங்கள் முன்னரே இதை சொல்லவில்லை என்று சொல்ல, இரு தரப்பினருக்கும் வார்த்தைகள் முற்றி தகராறில் முடிந்தது.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தனர்.
இதையடுத்து நிச்சயதார்த்தத்துடன் இந்த திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் பிரபல தெலுங்கு படமான ‘பலகம்’ போல இருக்கிறது என்று அந்த பெண்ணின் அக்கம் பக்கத்து வீட்டினர் இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
”துரோகம் செய்ய நினைத்தால் வாழ முடியாது” : ஜெயக்குமார்
”எடப்பாடி பெயர் சொல்வதற்கு கூட தகுதியில்லாத கத்துக்குட்டிகள்”: சாடிய வளர்மதி