வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று (செப்டம்பர் 6) டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தஷேக் ஹசீனா, “இந்தியா வங்க தேசத்தின் நட்பு நாடு. இந்தியாவிற்கு வரும்போதெல்லாம்,
எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, குறிப்பாக வங்கதேச விடுதலைப் போரின் போது இந்தியா செய்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவுகூருகிறோம்.

இன்று நடைபெறும் விவாதம் மிகவும் பயனுள்ள விவாதமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், பொருளாதார வளர்ச்சி மற்றும் எங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது முக்கிய நோக்கமாக இருக்கும்.
நட்பின் மூலம் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும். எனவே, நாங்கள் எப்போதும் அதை செய்வோம் என்று கூறினார்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தக உறவை மேம்படுத்துதல், மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு, நதிநீர்ப் பங்கீடு,
நீர் மேலாண்மை, எல்லை பராமரிப்பு, போதைப்பொருள்; ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பிரதமர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும், ரயில் போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஒலிபரப்பு ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர் பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”காவலுக்கு வந்த கடல் ராசா” : ஐ.என்.எஸ். விக்ராந்தின் மறுபிறப்பு!