கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் அரசியல் உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு விஷயங்களில் முக்கிய பங்காற்றியவர்.
பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்தான் மன்மோகனை அரசியலுக்குள் கொண்டு வந்தார். நரசிம்மராவ்தான் அவரை முதன் முதலில் நிதியமைச்சராக ஆக்கினார். பின்னர், இரு முறை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். மிகவும் எளிமையான மனிதரான மன்மோகன் வெஜ் உணவுகளைதான் விரும்பி சாப்பிடுவார்.
ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய மன்மோகன் சிங், நான் சைவம் மற்றும் அசைவம் என எந்த வேறுபாடும் பார்க்கவில்லை . ஆனால், நாம் அறிவார்ந்த தேர்வுகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இறைச்சி கலந்த உணவுகளை விட சைவ உணவுதான் சிறந்தது என்ற முடிவுக்கு மருத்துவ விஞ்ஞானமும் இப்போது வந்துள்ளது. மாதுளை கலந்த தயிர்சாதம், பப்படம் கொஞ்சம் ஊறுகாய் இதோடு எனது மதிய உணவு முடிந்து விடும் என்று தெரிவித்திருந்தார். தயிர் கலந்த உணவு மன்மோகனுக்கு எப்போதும் பிடித்த விஷயமாகும்.
ஆனால், ஒரு முறை மன்மோகன்சிங் மீன் உணவை விரும்பி சாப்பிட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு போன போது ஹில்சா மீனை விரும்பி உண்டார். அதன் சுவை பற்றி கேள்விப்பட்டிருந்ததால், அந்த மீனை விரும்பி உண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
வங்கதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்த ஹில்சா மீன் மிகவும் பாப்புலரான மீன் உணவு வகையாகும். வங்கதேசத்தில் ஒரு கிலோ ஹில்சா மீனின் விலை 1,160 ரூபாய் ஆகும். இது அந்த நாட்டின் தேசிய மீனாகவும் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்