வயநாடு நிலச்சரிவு : உதவிக்காக களமிறங்கிய பிரபல நடிகை – வீடியோ வைரல்!

இந்தியா சினிமா

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்மேற்கு பருவமழையால் கொட்டித்தீர்த்த கனமழையில் கேரளா மாநிலம் வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை அங்கு பலியானோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது. மேலும் தங்களது வீடு, உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான வங்கி கணக்கு எண்ணையும் அறிவித்துள்ளது.

Image

மேலும் பல்வேறு கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கண்ணூர் தளிபரம்பாவை சேர்ந்த பிரபல மலையாள நடிகை நிகிலா விமல், DYFI ஆல் தொடங்கப்பட்ட மக்களுக்கான பொருட்கள் சேகரித்து வரும் மையத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

சேகரிக்கப்பட்ட பொருட்களை பெட்டியில் எடுத்து வைக்கும் பணியில் சக ஆர்வலர்களுடன் இணைந்து நேற்று இரவு வெகுநேரம் பணியாற்றினார்.

இதுதொடர்பான வீடியோவை DYFI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல மலையாள நடிகையான நிகிலா, தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி, ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு குறித்து பிரார்த்தனைகள், பதிவுகள் என்று தங்களது சமூகவலைதளங்களில் மட்டும் பதிவுகள் போடாமல், களத்தில் நேரடியாக இறங்கி மக்களுக்கு பணிபுரிந்து வரும் நடிகை நிகிலா விமலின் செயல் பாராட்டுக்குரியது என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சட்டெனெ அதிகரித்த தங்கம் வெள்ளி விலை… இன்றைய நிலவரம் என்ன?

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. கவனிக்க வேண்டிய பங்குகள் இவைதான்!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
3