வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து வயநாட்டின் மேப்பாடு, முண்டகை மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இதனால் அப்பகுதிகளில் இருந்த 400 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கினர்.
இதனையடுத்து நேற்று காலை முதல் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர் மூலம் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அங்கு உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் 45 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 3,069 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளர்.
இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ளப் பெருக்கு: நீரில் மூழ்கிய அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள்!
சென்னை சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் : அபராத தொகை ரூ.10,000 ஆக உயர்வு!