ஏடிஎம் இயந்திரத்தையே கயிறு கட்டி இழுத்துச் சென்ற திருடர்கள்!

Published On:

| By christopher

Thieves dragged the ATM machine with a rope

ஏடிஎம் இயந்திரத்தை திருடர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட்பீ மாவட்டத்திலுள்ள தரூர் நகரத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஏடிஎம் மையம் ஒன்றிலிருந்த ஏடிஎம் இயந்திரத்தை திருடர்கள் சிலர் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவில் இந்த கொள்ளை முயற்சி நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று மழை பெய்து கொண்டிருந்ததால், ரெயின்கோட் அணிந்தபடி ஏடிஎம் மையத்திற்கும் புகுந்த மர்ம நபர்கள் இருவர், ஏடிஎம் இயந்திரத்தை சுற்றி கயிற்றைக் கட்டி, அதனைத் தங்கள் காருடன் இணைத்துக் கட்டியுள்ளனர். அதன் பின், காருடன் சேர்த்து ஏடிஎம் இயந்திரத்தை இழுத்துச் சென்றுள்ளனர்.

அதில் ஏடிஎம் இயந்திரம் உடைபட்ட நிலையில், இச்சம்பவம் குறித்த தகவல் வங்கி அலுவலகர்களுக்குச் சென்றது. இதையடுத்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சுமார் 60 கி.மீ. தூரம் திருடர்களை விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்துள்ளனர். எனினும், காரிலிருந்த திருடர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட ஏடிஎம்மில் சுமார் ரூ. 24 லட்சம் பணம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை முயற்சியில் மொத்தம் நான்கு பேர் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் ஏடிஎம் மையத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

”கலைஞரின் பிறந்தநாள் இனி செம்மொழி நாள்” : அமைச்சர் அறிவிப்பு!

ஒழுகும் அயோத்தி ராமர் கோயில் கூரை: தலைமை அர்ச்சகர் கவலை!

T20WorldCup : ஆஸ்திரேலியாவை பழிதீர்த்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

டாப் 10 நியூஸ் : அதிமுக – ஆளுநர் சந்திப்பு முதல் இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் வரை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share