ஆட்கள் தேவை… ஆனா அந்த தகுதி தேவையில்லை – எலான் மஸ்க்

Published On:

| By Selvam

தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்ற சாப்ட்வேர் இன்ஜினீயரிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்பதை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வித்தியாசமாகப் பதிவிட்டுள்ளது, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே ‘டிக்டாக்’ செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் , தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார்.

எலான் மஸ்க் எப்போது என்ன பேசுவார், யாருக்காக இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவார் என யாருக்கும் தெரியாது என்கிற நிலையில்,
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள்.

எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் பெற்றீர்களா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்” என்று எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து கொரோனாவின்போது உலகமே வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, தன் டெஸ்லா ஊழியர்களை வேலைக்கு வரக் கட்டாயப்படுத்தியவர் எலான் மஸ்க். இப்படி தரை லோக்கலாக இறங்கி அடிப்பது போன்ற வேலைகளை, கடந்த சில ஆண்டுகளாக எலான் மஸ்க் தொடர்ந்து செய்து வருகிறார். இதுவும் அப்படித்தான் என்று அவரைப் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: டோக்ளா

டாப் 10 நியூஸ்: எம்ஜிஆர் பிறந்தநாள் முதல் ஈரோடு கிழக்கு வேட்புமனு தாக்கல் வரை! 

ஜாமீன் கிடைத்தும் சிறையில் உறங்கிய பாபி செம்மனூர்: நீ நடத்தும் நாடகமே!

சாம்பியன்ஸ் டிராபி : பாக். செல்லாத இந்திய அணி… ரோகித் மட்டும் போகும் பின்னணி என்ன?

இது புதுசா இருக்கே… காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கார்டில் மாற்றம்!

கோவையில் தேசிய தொழில் பழகுநர் முகாம்: கலந்துகொள்வது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel