லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரை ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் ரயிலில் சுற்றி பார்க்கும் வகையில் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த ரயில் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லாவோஸ் நாட்டில் புறப்படும் ரயில் போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் , ரஷ்யா, சீனா , வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூரை வந்தடையும்.
இந்த ரயில் பயணத்துக்கு இந்த நாடுகளிலுள்ள ரயில்வே துறையினர் உதவிக்கரமாக இருப்பார்கள். 21 நாட்கள் இந்த ரயிலில் நீங்கள் சுற்றி வரலாம். சில இடங்களில் பேருந்து பயணத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வியட்நாமில் இருந்து கம்போடியா, மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்தில் பயணம் செய்ய வேண்டியது இருக்கலாம். 13 நாடுகளின் வழியாக இந்த பயணம் இருக்கிறது. அதில், 7 நாடுகளில் விசா நீங்கள் பெற வேண்டியது இருக்கும்.
லாவோஸ் நாட்டில் புறப்படும் ரயில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நிறுத்தப்படும். அடுத்து , பிரான்ஸ் வழியாக ரஷ்யாவுக்குள் சென்று சீனாவுக்குள் நுழையும். அடுத்து, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா கடைசியாக சிங்கப்பூர் என பயணதிட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த ரயில் பயணம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.
தற்போதுதான், அது நிறைவேறும் தருணத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து லாவோஸ் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைப்பதால், லாவோஸ் டூ சிங்கப்பூர் ரயில் பயணம் சாத்தியப்பட்டுள்ளது. இந்த ரயில் 18,755 கி.மீ தொலைவை கவர் செய்கிறது. இதற்கு 1,350 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ஆகும். ஆனால், இந்த ரயிலின் பயண தேதி விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
பிளஸ் ஆனா உப்பு தான் போல : அப்டேட் குமாரு
விஜய், ஆதவ் மீது விமர்சனம்: அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் திடீர் உத்தரவு!