சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 புவி மற்றும் நிலவு சுற்று வட்டப்பாதையில் தொடர்ந்து 40 நாட்கள் பயணித்து வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மாலை 5.44-க்கு தொடங்கினர்.
15 நிமிடங்களில் விக்ரம் லேண்டரின் உயரம் மற்றும் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு சரியாக மாலை 6.04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தடம் பதித்தது லேண்டர்.
நிலவில் தரையிறங்கிய லேண்டர் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு தூசிகள் அடங்கும் வரை எதுவும் செய்யாமல் அப்படியே இருக்கும். அதன் பின்னர் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்த உடன் லேண்டரை புகைப்படம் எடுக்க உள்ளது. லேண்டர் ரோவரை புகைப்படம் எடுக்க உள்ளது.
லேண்டர் மற்றும் ரோவர் ஒன்றை ஒன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்ப உள்ளது. இந்த புகைப்படத்தை காண்பதற்காக இந்தியா மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.
அதன் பின்னர் நிலவில் ஆய்வுப் பணிகளைத் தொடங்க உள்ளது ரோவர்.
நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
மோனிஷா
சந்திரயான் 3: லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது!
ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!