ரூ.11 இருந்தா வியட்நாமுக்கு பறக்கலாம்… உண்மையா?

Published On:

| By Kumaresan M

ஆசிய நாடான வியட்நாமில் சுற்றி பார்க்க ஏராளமாக இடங்கள் உள்ளன. இந்த நாட்டின் தலைநகரம் கோசிமின் சிட்டி அழகு மிகுந்தது. வியட்நாமுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. பலரும் வியட்நாமுக்கு செல்ல பிளான் போடுவார்கள். ஆனால், அதற்கான நேரம் அமையாமல் தள்ளி போட்டுக் கொண்டே இருப்பார்கள். Fly to Vietna Vietnam Journey eleven rupeesm just Rs 11

தற்போது, வியட்நாமுக்கு சுற்றுலாப்பயணிகளை இழுக்க அந்த நாட்டை சேர்ந்த ஏர்லைன்சான வியட்ஜெட் புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த ஏர்லைன்சில் ரூ.11-க்கு வியட்நாமுக்கும் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும். இந்த ஆஃபர் விடுமுறை காலங்களிலும், திருவிழா காலங்களிலும் பொருந்தாது.

இந்தியாவில் கொச்சி, மும்பை , பெங்களுரு, அகமதாபாத் போன்ற நகரங்களில் இருந்து ஹோசிமின் சிட்டி, டா நங், ஹனோய் போன்ற வியட்நாம் நகரங்களுக்கு 11 ரூபாயில் பயணிக்க முடியும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ஆஃபரில் நீங்கள் டிக்கெட் புக் செய்ய முடியும். வியட்ஜெட் வெப்சைட் அல்லது ஆப்களில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். Fly to Vietnam just Rs 11

நீங்கள் இடையில் உங்கள் பயணத்திட்டத்தை மாற்றினால் அதற்கான தனிக்கட்டணம் உண்டு. எனவே, சரியான பயண திட்டத்தை செய்வது அவசியமானது. டிசம்பர் 31 வரை காலக்கெடு இருந்தாலும் முன்னரே டிக்கெட்டுகளை புக் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

வியட்நாம் நகரங்களில் இருந்து வியட்ஜெட் வாரத்துக்கு 10 மார்க்கங்களில் 78 முறை இந்திய நகரங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share