அரசுப் பள்ளி ஒன்றில் மாணவிகள் பீர் அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மஸ்தூரி பகுதியின் பட்சௌரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சில மாணவிகள் கடந்த ஜூலை 29-ம் தேதி அன்று வகுப்பறையில் தங்கள் வகுப்பு தோழியின் பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்போது அவர்கள் பீர் குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவர் ஒருவர் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
▶#ClassRoom में #BeerParty करते छात्राओं की तस्वीर #SocialMedia पर जमकर हो रहा #Viral#viralvideo #ibc24 #chhattisgarhnews #cgnews #bilaspur #students pic.twitter.com/0gRXZzxBsV
— IBC24 News (@IBC24News) September 10, 2024
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோ குறித்து பேசியுள்ள பிலாஸ்பூரின் மாவட்ட கல்வி அதிகாரி டி.ஆர் சாஹு “இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குமூலங்களை நேற்று அந்த குழு பதிவு செய்தது. வீடியோ எடுக்கும்போது வேடிக்கைக்காக பீர் பாட்டில்களை அசைத்ததாகவும், ஆனால், பீர் அருந்தவில்லை என்றும் மாணவிகள் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர்.
பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வகுப்பறையில் மது குடித்து பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பள்ளி மாணவிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர், பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்
’சத்யம் சுந்தரம்’ ஆக மாறிய கார்த்தியின் மெய்யழகன்!
இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!
தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாமானியன்… இளையராஜாவை சந்தித்த ராமராஜன்