வீட்டுக்குள் நுழைந்து வளர்ப்பு நாயைத் தாக்கிய சிறுத்தை: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Published On:

| By Kavi

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், கருப்பு நிற லாப்ரடோர் ரெட்ரீவர் நாய், மவுண்ட் அபுவின் சன்ரைஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் நடந்து செல்கிறது. இந்த நேரத்தில் ஒரு சிறுத்தை வீட்டின் எல்லைச் சுவரைத் தாண்டி குதித்து நாயின் மீது பாய்கிறது.

வீடியோவில், சிறுத்தை நாயின் கழுத்தை கடித்ததையும், நாய் அதை எதிர்த்து போராட முயற்சி செய்வதையும் பார்க்க முடிகிறது. கடைசியில் வீட்டின் உரிமையாளர் கத்த ஆரம்பித்து கதவைத் திறந்ததும் சிறுத்தை தப்பி ஓடுகிறது. தப்பித்த நாய் அந்தப் பெண்ணுடன் மீண்டும் வீட்டுக்குள் செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ வைரலான பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மாலா குமாரி என்பவரின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த வீடியோ அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது… இதோ வழி!

மகாராஷ்டிராவிலும் பானை- விசிக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து : விக்னேஷ் மீது டாக்டர் ஜாக்குலின் மோசஸ் புகார்!

மிச்சிலி ஒபாமா கழிவறையில் பாதுகாவலர் செய்த காரியம்… உடனடி சஸ்பெண்ட்!

அரியலூர் சிப்காட்… ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment