உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்துள்ளது பாங்கே பிஹாரி கோயில். அந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்குள் சுவாமியைப் பார்த்து முடித்ததும் கோயிலின் சுற்றுச்சுவர் சிற்பத்தில் இருந்து கொட்டிய நீரை, தீர்த்தம் என நினைத்து பிடித்துக் குடித்தனர்.
உண்மையில், அது தீர்த்தமே அல்ல என்றும் கோயிலுக்குள் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறிய கழிவுநீர்தான் என்றும் அப்போதே செய்திகள் வெளியாகின. அது தொடர்பான வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, கோயில் நிர்வாகம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது.
‘பொதுவாக அபிஷேக நீரோ அல்லது கோயில் தீர்த்தமோ… துளசி, ரோஜா இதழ்கள் சேர்த்து பக்தர்களுக்கு மரியாதையுடன் கோயில் வளாகத்தில்தான் வழங்கப்படும். கோயிலின் சிற்பத்தில் இருந்து வெளியேறிய நீர், ஏசியிலிருந்து ஒழுகிய கழிவுநீர்தான். அபிஷேகம் செய்த தீர்த்தம் இல்லை. அதை பக்தர்கள் அபிஷேக நீர் என்று நினைத்துக் குடித்துவிட்டனர். கடவுளின் மீதான பக்தர்களின் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த தகவலை அவர்களுக்கு நாங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்று விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த விளக்கத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘நாங்கள் மிகுந்த இறை நம்பிக்கையோடு கோயிலுக்கு வருகிறோம். இந்தச் செய்தி எங்கள் இதயத்தை சுக்குநூறாக்குகிறது. இந்த நீரை பக்தர்கள் குடிக்காத வகையில் கோயில் நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும்’ என்று தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை டைடல் பார்க்… 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
தெலுங்கர்கள் குறித்த அவதூறு பேச்சு… மன்னிப்பு கேட்ட கஸ்தூரி
முகமது ஷமிக்கு என்ன ஆச்சு… களத்துக்கு எப்போது திரும்புவார்?
கோவை ‘டைடல் பார்க்கை’ திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்