ஹைதராபாத்தில் ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நுழைந்த நாயைத் துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் சிலருடன் ஹோட்டல் வந்த 23 வயது இளைஞர் அங்கு நுழைந்த நாயை விளையாட்டாக துரத்திச் சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக திடீரென கீழே விழுந்தார். உடனே அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பலியானவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார். நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/mirrornow_in/reel/DBax6yesIkV/
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: எட்டிப்பார்க்கும் நரை முடியைப் பிடுங்காதீர்கள்!
ஹெல்த் டிப்ஸ்: டயட் இருக்க விரும்புகிறீர்களா… உங்களுக்கு ஏற்றதுதானா?
டாப் 10 நியூஸ் : சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு முதல் ‘அமரன்’ ட்ரெய்லர் ரிலீஸ் வரை!