ஆந்திரப் பிரதேச மாநிலம், மன்யம் மாவட்டத்தில் மது போதையில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி மின்சாரம் பாயும் கம்பிகளின் மீது படுத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மன்யம் மாவட்டம், எம்.சிங்கிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் பென்சன் பணத்தைக் கேட்டு சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து அவரது தாய் பணத்தை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த அவர் மதுபோதையில் அந்தக் கிராமத்திலுள்ள மின் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கிராமவாசிகள் டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால், மொத்த கிராமத்துக்கும் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்சார கம்பிகளின் மீது படுத்துக் கொண்டுள்ளார். பின்னர், சில நேரம் கழித்து அந்த இளைஞர் மின்சாரக் கம்பத்திலிருந்து கீழே இறங்கி வந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கிராமவாசிகள் இறங்கி வருமாறு அந்த இளைஞரிடம் கெஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : பள்ளிகள் திறப்பு முதல் மலர் கண்காட்சி தொடக்கம் வரை!