9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்!

Published On:

| By Selvam

vande bharat trains modi

பயணிகள் விரைவான ரயில் போக்குவரத்து சேவையை பெறுவதற்காக இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைக்கிறார்.

உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத்

உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலை விட 30 நிமிடங்களில் பயண தொலைவை முன்னதாக அடையும். ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டுக்கு வரும் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். ராஜஸ்தானில் ஜோத்பூர் – சபர்மதி, அஜ்மீர் – டெல்லி கான்ட் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில்

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு விரைவில் பயணம் செய்வதற்கு திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயிலை விட வந்தே பாரத் ரயில் 2 மணி நேரம் முன்னதாக செல்லும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் பயணிக்கும்.

ஹைதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் ரயில்

ஹைதராபாத் ஹச்குடா முதல் பெங்களூரு யஷ்வந்த்பூர் வரை வந்தே பாரத் ரயில் பயணிக்கும். மஹபுநகர், குர்னூல், ஆனந்தபூர், தரம்வரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 530 பேர் வரை பயணம் செய்யலாம்.

விஜயவாடா – சென்னை வந்தே பாரத் ரயில்

விஜயவாடா – சென்னை வந்தே பாரத் ரயிலானது தேனளி, ஒங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா வழித்தடங்களில் பயணிக்கிறது.

பாட்னா – ஹவுரா வந்தே பாரத் ரயில்

பாட்னா – மேற்கு வங்கத்தை இணைக்கும் ரயில் சேவையாக உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலானது 532 கி.மீ தொலைவை 6 மணி நேரம் 35 நிமிடத்தில் கடக்கும்.

காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்

கேரளாவில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில். 3 மணி நேரம் முன்னதாக பயண தொலைவை அடைகிறது. 573 கிலோ மீட்டர் தொலைவை 7 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும்.

ரவுர்கேலா – புபனேஸ்வர் – புரி வந்தே பாரத் ரயில்

ஒடிசா மாநிலம் புரியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு ரவுர்கேலாவை மதியம் 12.45 மணிக்கு சென்றடையும். ரவுர்கேலாவிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு புரி ரயில் நிலையத்தை வந்தடையும்.

ராஞ்சி – ஹவுரா வந்தே பாரத் ரயில்

ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தை இணைக்கும் விரைவான ரயிலாக ராஞ்சி, ஹவுரா வந்தே பாரத் ரயில் உள்ளது. முரி, கோட்ஷில்லா, புரிலியா, ஷண்டில், டாடாநகர், காரக்பூர் வழித்தடங்களில் ரயில் நின்று செல்லும்.

ஜாம்நகர் – அகமதாபாத் வந்தே பாரத் ரயில்

ஜாம்நகர் – அகமதாபாத் வந்தே பாரத் ரயிலானது 331 கி.மீ தொலைவை 4 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். ஜாம்நகரிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயிலானது காலை 10.10 மணிக்கு அகமதாபாத் ரயில் நிலையத்தை சென்றடையும்.

செல்வம்

பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel