நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை!
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில், பயணிகள் வரவேற்பு குறைந்ததன் காரணமாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான சேவை நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆறாவது வந்தே பாரத் ரயில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்பட்டது.
இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன்கொண்ட இந்த ரயிலில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்புக் கட்டணம் 2,045 ரூபாயும், கார் சேர் வகுப்பு கட்டணமாக 1,075 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ரயிலில் பயணிக்க 50 சதவிகிதம் அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில் இவ்வாறு நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.
நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளதாகவும், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதில் இனி தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“துரோகிகள் இருவரும் இணைந்து விட்டனர்”: எடப்பாடி தாக்கு!
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி