மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 6 ) காலை குஜராத்தின் காந்தி நகர் நோக்கி அதாவது, பட்வா- மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரயில் என்ஜினின் முன்பக்கம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பின்னர் என்ஜின் சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 7 ) வந்தே பாரத் ரயில், ஆனந்த் ரயில் நிலையம் அருகே கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
நேற்று எருமை கூட்டத்தின் மீது மோதியதில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், இன்று பசு மாடு ஒன்றின் மீது ரயில் மோதியுள்ளது.
சிறிய அளவு சேதம் என்பதால் ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 2வது முறையாக வந்தே பாரத் ரயில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு பின், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்து இருந்த நிலையில், மீண்டும் அதே சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாடு முட்டி சேதமான மோடி ரயில் !
கூகுள் பிக்சல் 7 சீரிஸ்: விலை இவ்வளவுதானா?