உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் இறப்பு: விசாரணையை முடுக்கிய இந்தியா

இந்தியா

உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் இறப்பிற்குக் காரணமான இந்திய மருந்து நிறுவனத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்து சமர்கண்ட் நகரைச் சேர்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த உஸ்பெகிஸ்தான் அரசு அந்த அறிக்கையில், “நொய்டாவைச் சேர்ந்த மரியோன் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப் குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா தயாரித்த அந்த மருந்தில் அதிக நச்சுத்தன்மை உடைய எத்திலீன் கிளைகால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.

இந்த புகார் தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் பயோடெக் நிறுவனம் மருத்து உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “டாக்-1 மேக்ஸ் இருமல் சிரப்பின் மாதிரிகள் சண்டிகர் மாநிலத்தில் உள்ள மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையின் படி அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று கூறியுள்ளார். மேலும் உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்து கட்டுப்பாடு அமைப்புடன் டிசம்பர் 27 ஆம் தேதியில் இருந்து தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு உத்தரபிரேதசத்தில் உள்ள மரியோன் பயோடேக் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

காம்பியாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த இருமல் மற்றும் சளி சிரப்களால் 70 குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய அரசும், மருந்து நிறுவனமும் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

துணை முதல்வர் உதயநிதி: அன்பில் மகேஷ் குஷி பேச்சு!

புரட்சிப் பெண்ணான புதுவை ஆட்சியர்: குவியும் பாராட்டுகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.