உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. tunnel collapse final stage
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சார் தாம் சுரங்கப்பாதையில் நவம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
ட்ரில்லிங் இயந்திரங்கள் மூலமாக துளையிட்டு தொழிலாளர்களை வெளியேற்றவும், பைப்கள் மூலம் ஆக்சிஜன், உணவு, குடிநீர் செலுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை எண்டோஸ்கோபிக் கேமரா மூலம் மீட்பு படையினர் கண்டறிந்து வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதைக்குள் ஆகர் என்ற இயந்திரம் மூலம் 55 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் பணியானது முடிந்துவிட்டது. இன்னும் 2 மீட்டருக்கு துளையிட்டால் சுரங்கப்பாதைக்குள் குழாய் மூலம் வழி ஏற்படுத்தி தொழிலாளர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் குறித்து உத்தர்காஷி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ருகிலா கூறும்போது, “மீட்பு பணியில் பெரும்பான்மையான தூரத்தை கடந்துவிட்டோம். இன்னும் சிறிய தூரம் தான் உள்ளது. எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை சமாளிக்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றன.
நிபுணர்கள் மற்றும் திறமையான நபர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். அவர்களில் சிலர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் எப்போது முடிவடையும் என்று சொல்ல முடியாது.
ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் நாங்கள் பெற்று வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். tunnel collapse final stage
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருநெல்வேலி: மூன்று திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்!
ஜப்பானிய காடை வளர்ப்பு: இலவசப் பயிற்சி!