உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் ஹதுடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சத்பால். 45 வயதாகும் இவருக்கு காயத்ரிதேவி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அடிக்கடி தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் குழந்தைகளுக்காக பிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த இரு 2 நாட்களுக்கு முன்பு, மதியம் ஆட்டுக்கறி வாங்குவதற்காக ரூ. 300 தரும்படி, மனைவி காயத்ரியிடம் கேட்டுள்ளார் சத்பால். ஆனால், 300 ரூபாயை கொடுப்பதற்கு காயத்ரி மறுத்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதமும் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல், காயத்ரியை சத்பால் கடுமையாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த காயத்ரி, சத்பாலை தரதரவென வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து தள்ளினார்.
பின்னர், தெருவில் கிடந்த செங்கல்லை எடுத்து கணவனின் மார்பு மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரது தலையிலேயே கடுமையாக தாக்கினார். இதில், சத்பாலின் மண்டை உடைந்தது. அப்போதும் விடாமல் செங்கல்லால் கணவரின் தலையை தாக்க சத்பால் இறந்தே போனார்.
இதற்கு பிறகு, எந்தவிதமான சலனமும் இல்லாமல், காயத்ரி வீட்டிற்குள் சென்றுவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயத்ரிதேவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: காங்கிரஸ் முக்கிய டிமாண்ட்!
வயநாடு நிலச்சரிவு: பெற்றோர் உடல் கிடைக்கவில்லை… வேதனையுடன் இங்கிலாந்து புறப்பட்ட நர்ஸ்!