ஆறு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை: காரணம் என்ன?

இந்தியா

அமெரிக்காவில் செயல்படும் ஆறு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு அதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவின் வான்பரப்பில் அத்துமீறி சீனாவின் உளவு பலூன் பறந்தது என்ற விவகாரம் கடந்த வாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டது.

எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்துள்ளது என சீனா கூறியது. எனினும், இதை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறி வருகிறது.

தொடர்ந்து அதைச் சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. 

us sanctions six chinese firms

உலகம் முழுவதும் ஐந்து கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது.

அமெரிக்காவின் இந்த செயல் சீனாவுடனான உறவை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றே சீனா பதிலாக தெரிவித்தது.

இந்த நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக பல சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கம் அதுபோன்ற ஆறு சீன நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதித்து உள்ளார்.

அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததற்கு எதிர்வினையாற்றும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. 

us sanctions six chinese firms

இதன்படி, ஐந்து சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆய்வு மையம் என ஆறு சீன நிறுவனங்களை அமெரிக்க வர்த்தகத் துறை இதற்கான பட்டியலில் சேர்த்துள்ளது.

இதனால், சிறப்பு உரிமம் இன்றி அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும்.

இந்த ஆறு சீன நிறுவனங்களும், உளவு பணிகளுக்கான விண் கப்பல்கள் மற்றும் உளவு பலூன்களுடன் தொடர்புடைய சீனாவின் ராணுவ திட்டங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மயில்சாமி மரணம்: சிவபுராணம் இசைத்த சிவனடியார்கள்

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *