அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகளில் வெற்றிக்கு தேவையான 270 எலெக்டோரல் வாக்குகளில் 190க்கும் அதிகமான வாக்குகளை பெற்று டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கடந்த 4ஆம் தேதி தங்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முடித்தனர். இதனையடுத்து உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
இதனையடுத்து இன்று (நவம்பர் 6) அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் குறைந்தபட்சம் 270 எலெக்டோரல் வாக்குகளை பெற வேண்டும்.
அந்த வகையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் தற்போது வரை 198 எலெக்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் ஓஹியோ, டெக்சாஸ் மற்றும் ஃபுளோரிடா உள்ளிட்ட நான்கு மாகாணங்களை முழுமையாக வென்றுள்ளார்.
இவற்றில் ஓஹியோ மற்றும் டெக்சாஸில் மட்டும் மொத்தம் 57 எலெக்டோரல் வாக்குகளை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக குடியரசுக் கட்சியினர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஓஹியோ மாகாணத்தில் வெற்றி என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் தற்போது அக்கட்சியின் வேட்பாளாரான டிரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அதே வேளையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 112 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். அவர் கொலரோடோ, நியூயார்க், லோவா உள்ளிட்ட மாகாணங்களில் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.
தேர்தல் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.6 சதவீதம், கமலா 46.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பென்சில்வேனியாவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு FBI விசாரணை விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டுக்குள் ஸ்ட்ரைக் செய்த பெண்கள் அணி!
சென்னையில் கொசுவலையைப் போர்த்திக்கொண்டு போராட்டம்!