விமானத்தில் இனிமேல் பிரச்சனை ஏற்பட்டு அவை தீர்க்கப்பட்டாலும் பணியில் உள்ள ஊழியர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என ஏர்இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டு அன்று நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது.
அதற்கு ஏர்இந்தியா நிறுவனம், பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த ஒரு பெண் பயணி, தன்அருகே உட்கார்ந்துள்ள ஆண் பயணி, தன் மீது சிறுநீர் கழித்து விட்டதாகவும், தனது உடைகளும், பையும் நனைந்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
அவருக்கு அதேவகுப்பில் வேறு இருக்கை அளிக்கப்பட்டது. மாற்று உடையும், செருப்பும் வழங்கப்பட்டது.
சற்றுநேரம் கழித்து, ஆண் பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டார்.
இருவரும் சமாதானமாக சென்றதால் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்தது.
மேலும் பெண் பயணி மீது சிறுநீர்கழித்த தொழிலதிபராக இருந்தபோதிலும் அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்திய விமானத்தில் பயணிக்க அவருக்கு தடை விதித்திருப்பதாகவும் கூறியது.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், இந்தியாவில் பணிபுரியும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இனி வரும் நாட்களில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவை உடனடியாக பணியாளர்களால் சரி செய்யப்பட்டாலும் அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விவகாரம் ஊழியர்களுக்கு ஒரு பாடம் என்றும் வரும் நாட்களில் எந்த தவறும் நிகழாமல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சு வைத்த கோரிக்கைகள்!
இணைய சேவை முடங்கினாலும் இனி ’வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!