யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது!

Published On:

| By christopher

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 12) வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

அதன்படி  இந்தாண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் அதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், 14,624 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை https://upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், யுபிஎஸ்சி மெயின் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

’பொய்‌ பரப்புவது எடப்பாடிக்கு கைவந்த கலை’: முதல்வர்