2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி நேர்காணல் முடிவுகள் இன்று (ஏப்ரல் 16) வெளியாகியுள்ளன.
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2023 செப்டம்பர் மாதத்தில், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகள் தேர்வு 2023-ன் எழுத்து தேர்வு மற்றும் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதி வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி, மத்தியப் பணிகள், குழு ‘ஏ’ மற்றும் குழு ‘பி’-யில், மொத்தம் 1016 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுப்பிரிவு 347, பொருளாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினர் 115 என மொத்த பொது பிரிவினர் 462 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒபிசி 303 , எஸ்சி 165, எஸ்டி பிரிவினர் 86 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், இந்திய ஆட்சிப் பணிக்கு 180 பேர், இந்திய வெளியுறவுப் பணிக்கு 37 பேர், இந்திய காவல் பணிக்கு 200 பேர் மத்திய பிரிவின் குரூப் ஏ பிரிவிற்கு 613 பே,ர் குரூப் பி பிரிவுக்கு 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் லக்னோவின் பிடௌலியைச் சேர்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Thug Life: மீண்டும் இணைந்த நடிகர்.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த சர்ச்சை..!
கத்திரிக்காய் கதை எல்லாம் இங்கு நடக்காது: பாஜகவை சீண்டிய செல்லூர் ராஜூ