அக்டோபர் மாதத்தில் ரூ.23.50 லட்சம் கோடி UPI மூலமாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று இந்தியத் தேசிய கட்டண நிறுவனம் (National Payment Corporation of India) தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் நாளுக்கு நாள் UPI பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. நொடியில் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிவதால் பெரும்பான்மையான மக்கள் இந்த முறையை விரும்புகிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, மொரிஷியஸ், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும் UPI சேவை பயன்பாட்டில் உள்ளது.
சமீபத்தில் பின் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யக்கூடிய UPI Lite சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியத் தேசிய கட்டண நிறுவனம் நேற்று (நவம்பர் 1) தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் ரூ.23.50 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 37 சதவீதமும், இந்தாண்டு செப்டம்பர் மாதத்தை விட 10.2% சதவீதம் அதிகம்.
மேலும், இதே காலகட்டத்தில் 16,580 கோடி முறை UPI சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 45 சதவீதம் அதிகம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விமர்சகரை மிரட்டிய மலையாள நடிகர் !
17 ஐபிஎல் சீசன்களில் தோனி, ரோகித் சம்பாதித்தது எத்தனை கோடி?
“விஜய்யுடன் திருமா கூட்டணி வைக்க மாட்டார்” – சீமான்