கடந்த அக்டோபர் மாதத்தில் 730 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்தியத் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் பணத்தைக் கையாளும் முறையும் டிஜிட்டல் ஆகிவிட்டது.
யுபிஐ பணப் பரிவர்த்தனை கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் அவர்களால் தொடங்கப்பட்டது.
கடைகளுக்குச் சென்று ஏதேனும் ஒரு பொருளை வாங்கிக் கொண்டு, மக்கள் தங்களது மொபைல் போனை எடுத்து ஸ்கேன் செய்து தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தி விடுகின்றனர்.
இதனால் விரைவாக வேலை முடிவதாகவும் கடைக்காரரிடம் சில்லறை கேட்டு நிற்க வேண்டிய அவசியமும் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர்.
தற்போது நாளுக்கு நாள் இந்த யுபிஐ பரிவர்த்தனை முறை வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.
இந்தியத் தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பர் மாதத்தை விட 7.7 சதவீதம் அதிகமாகும்.
செப்டம்பர் மாதம் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட யுபிஐ பேமெண்ட் ஆப் ஆக போன் பே இருக்கிறது.
போன் பே மூலம் 46 சதவீதம் பரிவர்த்தனைகளும் கூகுள் பே மூலம் 34 சதவீத பரிவர்த்தனைகளும் 20 சதவீதம் இதர செயலிகளைப் பயன்படுத்தியும் பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோனிஷா
ரஜினிகாந்த்தை வரவேற்ற கர்நாடக அமைச்சர்!
அரசு மீது அவதூறு: பாஜக நிர்வாகிக்கு சம்மன்!