யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் இல்லை! – மத்திய நிதியமைச்சகம்!

இந்தியா

யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் (upi payment) வசூலிக்க வாடிக்கையாளர்களிடம் ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது என்று தகவல் வெளியான நிலையில், யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு எந்த ஒரு பரிசீலனையும் செய்யவில்லை என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது.

ஏடிஎம்-களில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படுவதால், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

upi payment

சாதாரண டீக்கடையில் இருந்து பெரிய மால்கள் வரை  யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், யுபிஐ மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து வங்கிகளிடமும், பொதுமக்களிடமும் ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இது தினசரி போன் பே, கூகுள் பே பயன்படுத்துபவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் மத்திய நிதியமைச்சகம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

upi payment

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “யுபிஐ வசதி என்பது, பொதுமக்களுக்கான மகத்தான வசதியாகும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கான உற்பத்தி திறன் ஆதாயங்களைக் கொண்டது.

யுபிஐ சேவைகளுக்கு (upi payment) கட்டணம் வசூலிக்க அரசாங்கம் எந்த ஒரு பரிசீலனையும் செய்யவில்லை.

பொதுமக்களுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் யுபிஐ சேவைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது தெளிவாகிறது.

செல்வம்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.