upi limit for hospitals and institutions

மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கான… யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு ரூபாய் 5 லட்சமாக உயர்வு!

இந்தியா

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தெருவோர கடைகள் தொடங்கி மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை யுபிஐ பண பரிவர்த்தனை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ஜி-பே, போன்-பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த யுபிஐ பரிவர்த்தனையில் மேற்கண்ட மூன்று யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே 90% பண பரிவர்த்தனை நடந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17.4 லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை யுபிஐ வழியாக நடந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனை, கல்வி நிலையங்களில் அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி இன்று (டிசம்பர் 8)  அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், ”மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கான யுபிஐ வரம்பு ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது கல்வி மற்றும் சுகாதார விஷயங்களுக்காக அதிக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்,” என தெரிவித்து இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

மழையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: டிவிஎஸ் நிறுவனம்!

’கலைஞர்‌ 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *