கஞ்சாவை எலி தின்னுடுச்சு: காவல்துறையின் பதிலால் ஷாக்கான நீதிமன்றம்!

இந்தியா

குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா சோதனையில் 581கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2018மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய சோதனையில், 581கிலோ கஞ்சாவை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தது.

கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதைத் தொடர்ந்து காவல்துறை கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

ஆனால், ’நீதிமன்றம் இதை ஏற்க முடியாது. பறிமுதல் செய்யப்பட்ட 581கிலோ கஞ்சாவையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரா காவல்துறை நீதிமன்றத்தில் அளித்த பதில்தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மதுரா காவல்நிலைய அறைகளில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர்.

இதேபோல் 2017 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை தாம் பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தது.

மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு 150கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட போதும் எலிகள் கிட்டத்தட்ட 45கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கால்பந்து மைதானத்தில் ஜப்பான் ரசிகர்கள் செய்த செயல்!

நடிகர் கமல் வீடு திரும்பினார்!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.