ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களிலும் புகைப்பிடித்தல் வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை இன்று (மே31) உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
புகைப்பிடித்தல், மதுபானங்கள் உபயோகித்தல் உள்ளிட்ட காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். ஆனால், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், இணைய தொடர்களுக்கு தணிக்கை அவசியமில்லை.

இந்நிலையில், சர்வதே புகையிலை எதிர்ப்பு தினமான இன்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’ அல்லது ‘புகையிலை உயிரைக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இந்த அறிவிப்பை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: டெல்லி விரையும் அமைச்சர் மா.சு.
டாக்டரை குத்திய நோயாளி: ஐசியூ வாசலில் ஆயுதம் ஏந்திய போலீஸாரை நிறுத்தக் கோரிக்கை!