இலங்கையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்பாணம் கலாச்சார மையத்தினை மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று(பிப்ரவரி 11) திறந்து வைத்தார்.
இலங்கை நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி யாழ்ப்பாணம் கலாச்சார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் திறப்புவிழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னையில் இருந்து கடந்த 9ம் தேதி விமானத்தில் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாழ்ப்பாணம் கலாச்சார மையக் கட்டிடத்தை திறந்து வைத்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் அமைச்சர் எல். முருகன்.
பின்னர் அவர் பேசுகையில், “இன்று இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் மிகவும் முக்கியமான வரலாற்று நாள். இந்த யாழ்ப்பாணம் கலாச்சார மையம் இன்று இலங்கை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
“மார்ச் 2015ல் பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று நாங்கள் இதை இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். இது இந்திய மற்றும் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு சின்னமான இடமாக இருக்கும். இதை அர்ப்பணிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில் தலைமையேற்று நடத்திய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, யாழ்ப்பாணம் கலாசார மையமானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வாரிசு பட நடிகை அமெரிக்காவில் மூன்றாவது திருமணம்?
பார்டர் பரோட்டா கடையில் கெட்டுபோன சிக்கன்? – மறுக்கும் உரிமையாளர்