பரவும் கொரோனா – அலர்ட்டாக இருங்கள் : மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Kavi

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவி வரும் நிலையில் மாநிலங்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பணிகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (டிசம்பர் 20)  ஆலோசனை செய்தார்.

இதில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கொவிட் -19-ன் புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராகத் தயாராக இருக்க வேண்டும். பண்டிகை காலம் வரவுள்ளதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஒழியவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்திய சார்ஸ்-கோவ்-2 ஜீனோமிக்ஸ் கன்சார்டியம் (இன்சாகோக்) கட்டமைப்பு மூலம் கொரோனா மாறுபாடுகளைக் கண்காணிக்கத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறைக்கான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய மற்றும் மாநில நிலைகளில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாதிரி ஒத்திகைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கேரளாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. அங்கு 2041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 70க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கிறிஸ்துமஸ் விடுமுறை : சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

இதெல்லாம் கமல் சாரோட நிப்பாட்டிக்கங்க… மாயாவின் மூக்குடைத்த விக்ரம் தந்தை!

அர்ஜூனா விருது: 2022ல் தம்பி… 2023ல் அக்கா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share