வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று (ஆகஸ்ட் 31) அறிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரைநடந்து முடிந்தது.
இதனைத்தொடர்ந்து குளிர்காலக் கூட்டத்தொடர் தான் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் வழக்கம்போல் நடத்தப்படும்.
ஆனால், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 4 மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இன்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும். அப்போது பயனுள்ள விவாதங்கள் நடத்துவதற்கு காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் நடத்தப்பட கூடிய நிகழ்ச்சி நிரல்கள் குறித்து எந்த தகவலையும் அரசு தரப்பில் வெளியிடவில்லை.
அதே நேரத்தில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பச்சோந்தியாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டது: உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்!
இது தான் நடுநிலையா அமைச்சரே : அப்டேட் குமாரு!
மோடியை சந்தித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா