மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 – 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். union government budget highlights
இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. 12 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:
சராசரி மாத வருவாய் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை. புதிய வரித் தொகுப்பில் மாத ஊதியம் பெறும் பிரிவினர் ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
வேளாண்மை, எம்எஸ்எம்இ, முதலீடு, ஏற்றுமதி போன்ற வளர்ச்சியின் 4 எஞ்சின்களை மத்திய பட்ஜெட் அங்கீகரிக்கிறது.
குறைந்த அளவு வேளாண் உற்பத்தித் திறன் உள்ள 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதமரின் தன்-தானிய வேளாண் திட்டத்தில்’ 1.7 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் “பருப்பு வகைகளில் தற்சார்புக்கான இயக்கம்” தொடங்கப்படும். union government budget highlights
திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய திட்டத்தின்கீழ் கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்பதுடன் நிறைவு செய்ய நிதியாண்டு 2025 மதிப்பிட்டுள்ளது, நிதியாண்டு 2026-ல் இதனை 4.4 சதவீதத்திற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ-களுக்கு உத்தரவாதத்துடனான கடன் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவில் தயாரியுங்கள் (மேக் இன் இந்தியா”) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர, பெருந்தொழில்களையும் உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.
வளர்ச்சி மையங்களாக நகரங்கள் என்ற திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் துறை மூலமான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. union government budget highlights
காப்பீட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.
பல்வேறு சட்டங்களில் உள்ள 100-க்கும் அதிகமான பிரிவுகளை குற்றமற்றதாக மாற்றுவதற்கு மக்கள் விஸ்வாச மசோதா 2.0 அறிமுகம் செய்யப்படும்.
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான காலவரம்பு 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.
வருவாயில் வரி பிடித்தம் செய்து செலுத்துவதில் கால தாமதம் குற்றமற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
வாடகை வருவாயில் வரிப்பிடித்தம் ரூ.2.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு.
புற்றுநோய், அரிய மற்றும் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான 36 உயிர்காக்கும் மருந்துகள், மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானத்திற்கான கச்சாப்பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு.
குளிர்ப்பதனம் செய்யப்பட்ட மீன்பசை மீதான அடிப்படை சுங்கத்தீர்வை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பதப்படுத்தப்பட்ட மீன் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. union government budget highlights