ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் கோட்ட மேலாளர் ரிங்கேஷ் ராய் பேசுகையில், ”ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 1,100 பேர் காயமடைந்தனர். அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 200 பேர் மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 55 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
122 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டும், இன்னும் உறவினர்கள் பெறவில்லை. அதே நேரத்தில் 101 பேர் உடல்கள் இன்னும் அடையாளமே காணப்படவில்லை. அந்த உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.” என்று ராய் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விமானப் பயணிகள் தவறாக நடந்துகொள்வது அதிகரிப்பு: காரணம் என்ன?