இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாடு அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இந்த மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
“மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க விசா பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்” என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்த விதியில் இருந்து முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
டிஜிட்டல் திண்ணை: மோடி விழாவில் திருச்சி தந்த ஷாக்- ஸ்டாலின் நடத்திய விசாரணை!