ஐக்கிய அரபு அமீரகம் சமரசம்: ரஷ்ய வீரர்களை விடுவித்த உக்ரைன்!

ரஷ்ய – உக்ரைன் போர் ஓராண்டு நெருங்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சமரச முயற்சியால் உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த 63 ரஷ்ய வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான குடியிருப்புகள், கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படைகள் மீது ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், சேதங்கள் பதிவான கழுகுப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.

Ukraine released Russian soldiers

இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த தங்கள் நாட்டைச் சேர்ந்த 63 ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் சமரசம் செய்த நிலையில், கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் கைதிகளின் பரிமாற்றத்தை உக்ரைன் தரப்பும் உறுதி செய்துள்ள நிலையில், 116 உக்ரைனிய வீரர்கள் நாடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சொந்த நாடு திரும்பிய வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

ராஜ்

விசிக அலுவலகத்தில் தமிழில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு!

ரஜினியின் ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது!

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைப்பூச திருவிழா!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts