மத்திய பிரதேசம் மாநிலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியிடம் தவறாக நடந்த 10 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் சிறுமி யுகேஜி படித்து வந்துள்ளார். இந்த பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிவரின் மகனும் அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியை அந்த மாணவர் தந்தையின் அறைக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பியதும் தனது தாயிடத்தில் சிறுவனின் நடத்தை குறித்து கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பள்ளியின் முன் பெற்றோர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் போபால் நகரில் சிறுமி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பள்ளிகளில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிது பட்வாரி, ”பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நமது மகள்கள் தினசரி இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்” என்று தன் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். இதற்கிடையே , மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தனி டீம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
3000 ரன்கள் 300 விக்கெட்டுகள் : ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர்பா!
மாதத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை!